NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆஸ்கர் விருது வென்ற பயில்வான் ரங்கநாதன்.. வாழ்த்து தெரிவித்த வெங்கட்பிரபு.. ஏன் தெரியுமா?

சினிமா பத்திரிகையாளரும், படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சினிமா குறித்தும் திரைத்துறை நடிகர், நடிகைகள் குறித்தும் பல விஷயங்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இவர் மீது திரைப்பிரபலங்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் குறித்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், “இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் “இசை வெல்லம்” பயில்வான் ரங்கநாதன் சாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துகள். எங்களுக்கு செம்ம பெருமையான தருணம், உங்கள் பணியின் பெரிய ரசிகன் சார். மேலும் விவரங்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு ஜி.வி.பிரகாஷ் பதிவை பார்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Share:

Related Articles