NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தவாரம் OTTஇல் வெளியாகும் திரைப்படங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான விக்ரம் வேதா திரைப்படம் கடந்த 2017 ஜூலை 21ஆம் திகதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தில் ஹிந்தி ரீமேக்கில் மாதவன் கேரக்டரில் சைஃப் அலி கானும், விஜய்சேதுபதி கேரக்டரில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து படம் வெளியானது. தற்போது இந்தப் படம் வரும் 12ஆம் திகதி ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது.

நியூசென்ஸ் என்ற வெப் தொடர் ‘ஆஹா ஓடிடி’ தளத்தின் நேரடி பதிப்பாகும். இதில் நவ்தீப் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் வரும் 12ஆம் திகதி முதல் ஆஹாவில் ஒளிபரப்பாக உள்ளது.

தஹாத் எனற இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாக உள்ளது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது வரும் 12ஆம் திகதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

பென் அஃப்லெக் இயக்கிய ஒரு வாழ்க்கை வரலாற்று விளையாட்டு திரைப்படம் ஏர். பிரபலங்கள் நிறைந்த இந்தப் படத்தில் மாட் டாமன், ஜேசன் பேட்மேன் மற்றும் பென் அஃப்லெக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது வருகின்ற 12ஆம் திகதி முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

எகிப்தின் கடைசி அரசராக, கிளியோபாட்ரா தனது சிம்மாசனம், குடும்பம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க போராடுகிறார் என்பதே குயின் கிளியோபாட்ரா இந்த ஆவணப்படத்தின் கரு. இது இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

Share:

Related Articles