NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலில் சிக்கியிருந்த Bollywood நடிகை “நுஷ்ரத் பாருச்சா” இந்தியா திரும்புகிறார்

39வது (Haifa International Film Festival) இஸ்ரேலில் September 28 தொடங்கி Octobar 7வரை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக Bollywood நடிகை நுஷ்ரத் பாருச்சா இஸ்ரேல் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போர் காரணமாக திரைப்பட விழாவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் அங்கு சிக்கியிருந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தற்போது அவர் அங்கிருந்து பத்திரமாக மீண்டு இந்தியா வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles