NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதை செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறார்கள்’ – பிரியங்கா சோப்ரா வருத்தம்

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த சில மாதத்துக்கு முன் அளித்த பேட்டியில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் பாலிவுட் படமல்ல,அது தமிழ்ப் படம்’ என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். இதனால் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘சிட்டடெல்’ வெப் தொடரின் புரமோஷனில் கலந்துகொண்ட அவரிடம், இதுபற்றி கேட்கப்பட்டது.அதற்குப் பதிலளித்த அவர், “நான் செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டுபிடிக்கமுயற்சி செய்கிறார்கள். அதை, அவர்கள் ரசிக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் அதிக சுதந்திர மனப்பான்மையோடு இருந்தேன். இப்போது எச்சரிக்கையுடன் இருக்கிறேன். வாழ்வில் எவ்வளவு உயரத்துக்குச் செல்கிறீர்களோ, அதற்கு அதிகமாக நீங்கள் விழுவதற்கான காரணத்தை சிலர் தேடுகிறார்கள். அதேநேரம் எனக்கு என் குடும்பத்தினரிடமும் ரசிகர்களிடமும் அன்பும் ஆதரவும் உள்ளது. நான் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles