NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனா காணும் காலங்கள் சீசன் 2 – தேதியை அறிவித்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கனா காணும் லங்கள் தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு அழகான புரமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பப்பட்ட ‘கனா காணும் காலங்கள்’ தொடர், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட, ஒரு கிளாசிக் தொடராகும்.

அனைவராலும் விரும்பப்பட்ட இந்த பிரபலமான நிகழ்ச்சி, கடந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸாக புதிய அவதாரத்தில் மீண்டும் வந்தது. புதிய நடிகர்கள் மற்றும் நவீனக் கால கதைக்களத்தில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்த இந்த சீரிஸ், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 ஏப்ரல் 21 முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.


சீசன் 1 முடிவடைந்த இடத்திலிருந்து இரண்டாவது சீசன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் சிறகுகள் மாணவர்களிடமிருந்து காதல், சந்தோஷம், ஏக்கம், என அத்தனை உணர்வுகளையும் ரகிகர்கள் இரண்டு மடங்காகப் பெறுவார்கள்.  

Share:

Related Articles