NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கவனம் ஈர்க்கும் முத்தையா முரளிதரன் பயோபிக் போஸ்டர்

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘கனிமொழி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ படத்தை இயக்கி வருகிறார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ‘800’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் முத்தையா முரளிதரனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. ‘800’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles