NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கியூட் லுக்கில் அஜித் குமார் – வைரலாகும் புதிய புகைப்படங்கள்

திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். துணிவு படத்தைத் தொடர்ந்து இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த போஸ்டருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.

இந்த நிலையில், அஜித் குமாரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. கட்டம் போட்ட சட்டையில், சிரித்த முகத்துடன் காணப்படும் அஜித்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Share:

Related Articles