NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடிபோதையில் ரகளை செய்ததாக வதந்தி – 100 கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கமல் பட நடிகை

கமல்ஹாசன் நடித்த ’ஆளவந்தான்’ உட்பட சில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ரவீனா டண்டன். இவர் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது அவருடைய கார் விபத்தை ஏற்படுத்தியதாகவும் இதையடுத்து அவரிடம் அந்த பகுதி மக்கள் ரகளை செய்ததாகவும் கூறப்பட்டது.

உண்மையில் ரவீனா டண்டன் கார் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர் வேண்டுமென்றே ரகளையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இது குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பத்திரிகையாளர் என்று கூறிக் கொண்ட ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ரவீனா டண்டன் குடிபோதையில் ரகளை செய்ததாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நடிகை ரவீனா டண்டன் அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தன்னுடைய புகழுக்கு இழுக்கு நேரிடும் வகையில் வதந்தி பரப்பிய அந்த நபர் தனக்கு 100 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share:

Related Articles