NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சமூக வலைதளங்களில் இருந்து திடீரென வெளியேறிய கஜோல்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் தமிழில் மின்சார கனவு, தனுசுடன் VIP-2 ஆகிய படங்களிலில் நடித்து உள்ளார்.

இந்நிலையில், நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். எப்போழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை .சிலர் இதனை நடிகை கஜோல் நடித்து அடுத்து வரவிருக்கும் வெப் தொடரான’ தி குட் வைப் – அமெரிக்க கோர்ட்ரூம்’ நாடகத்தை விளம்பரப்படுத்துவதற்கான உத்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles