NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஜிவி பிரகாஷ் குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் சிவார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles