NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயனின் “SK 21” படக்குழு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது “SK 21” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை “ராஜ்குமார் பெரியசாமி” இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் “Rajkamal Filims Internationl” நிறுவனம் தயாரிக்க, GV பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

“SK 21” படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles