NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சோழ சாம்ராஜ்யத்தின் புகழை கண்டங்கள் தாண்டி கொண்டாடுங்கள் -சரத்குமார்.

விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படம் குறித்து நடிகர் சரத்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அதில், “பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி, தமிழ்த்திரைத்துறை மற்றும் தமிழ் சமூகத்திற்கு உலகளாவிய பெருமை சேர்த்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கும், சுபாஸ்கரன் அவர்களுக்கும், சக நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், #PS1 திரைப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கி கொண்டாடிய ரசிக பெருமக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறேன்.

நாளை வெளிவரவிருக்கும் #PS2 திரைப்படத்தில் திரையரங்கம் அதிரும் அளவிற்கு நீங்கள் தரும் வரவேற்பும், கொண்டாட்டமும், சோழ சாம்ராஜ்யத்தின் புகழை மேலும் கண்டங்கள் தாண்டி பரப்புவதற்கான உந்துதலை தரும்படி கொண்டாடி கண்டு மகிழுங்கள். சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி பெரிய பழுவேட்டரையர்” என்று பதிவிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles