NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘தனி ஒருவன் 2ல்’ அபிஷேக் பச்சன்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2015 – ம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தனி ஒருவன் 2 பற்றிய தகவலை மோகன் ராஜா, ஜெயம் ரவி வெளியிட்டனர்.

தனி ஒருவன் படத்தில் ஹீரோவை காட்டிலும் வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருந்தது. இதனால் தற்போது இரண்டாம் பாகத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனி ஒருவன் 2வில் Bollywood நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.    

Share:

Related Articles