NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

 நடிகர் தனுஷ். தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷின் பிறந்த நாளான June 28 “கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் “கேப்டன் மில்லர்”  படம் 3 பாகங்களாக உருவாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை வரலாற்று பாணியில் உருவாகி வருகிறது என கூறப்பட்டது. அதன் காரணமாக இப்படம் 3 காலங்களாக பிரித்து படமாக படுகிறது.

முதல் பாகம் 1940களில் நடக்கும் நிகழ்வுகள் கொண்டதாகவும் இரண்டாம் பாகம் 1990களில் நடக்கும் நிகழ்ச்சியாகவும் மூன்றாம் பாகம் இன்றைய காலகட்டத்தில் நடப்பது போல அமையப்பெறும் என கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles