NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரைத் துறையில் 35 ஆண்டுகள் – நடிகர் “சல்மான் கானுக்கு” ரசிகர்கள் வாழ்த்து

Bollywood ரசிகர்களால்”Baai” என அன்புடன் அழைக்கப்படுபவர் “சல்மான் கான்”. அண்மையில் அவரது நடிப்பில் “Kisi Ka bhai Kisi Ki jaan” படம் வெளியானது.

தீபாவளிக்கு “Tiger 3” படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் திரைத் துறையில் 35 ஆண்டுகளை கடந்துள்ளார்.

1988ஆம் ஆண்டு வெளியான Biwi Ho Toh Aisi படம் மூலமாக திரைத் துறையில் அடியெடுத்து வைத்தவர் சல்மான் கான்.

இப்படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள். தொடக்கத்தில் காதல் படங்களால் தனது பாதையை அமைத்தவருக்கு 1993ல் வெளியான “Hum Apke Hai Gone” மிகப் பெரிய புகழையும் அடையாளத்தையும் தேடித்தந்தது.

இந்நிலையில், அடுத்து அவரின் “Tiger 3” படத்துக்காக ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர். மேலும் திரையுலகில் 35 ஆண்டுகளை நிறைவு செய்த சல்மான் கானுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles