NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரைப்படமாகும் ‘கல்வான் பள்ளத்தாக்கு’ மோதல்

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு, சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். இதில் ஏற்பட்ட கைகலப்பில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தங்கள் தரப்பில் 4 வீரர்கள் மட்டும் உயிரிழந்ததாக, சீனா தெரிவித்தது. ஆனால், 45 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பும் தெரிவித்திருந்தன. இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.இந்த மோதலை மையமாக வைத்து, பத்திரிகையாளர்கள் ஷிவ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் இணைந்து, ‘இண்டியாஸ் மோஸ்ட் பியர்லஸ்- 3’ என்ற புத்தகத்தை எழுதினர். அதன் அடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் திரைப்படமாகிறது. இதற்கான உரிமையை இயக்குநர் அபூர்வா லாகியா பெற்றுள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர், ‘ஏக் அஜ்னபி’, ‘மிஷன் இஸ்தான்புல்’, ‘ஜன்ஜீர்’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். பான் இந்தியா முறையில் உருவாக இருக்கும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles