NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திவ்யா ஸ்ரீதர் அப்படியெல்லாம் செய்தார்.. குழந்தையை கேட்கமாட்டேன்: அர்னாவ் அதிர்ச்சி பேட்டி

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அவரது கணவர் அர்னாவ் இருவரும் திருமணமாகி சில மாதங்களிலேயே பிரச்சனையால் பிரிந்துவிட்டனர். கர்ப்பமாக இருக்கும் தன்னை அர்னாவ் தாக்கியதாக திவ்யா ஸ்ரீதர் கொடுத்த போலீஸ் புகார் காரணமாக அர்னாவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

தற்போது வரை பிறந்த குழந்தையை அர்னாவ் நேரில் சென்று பார்க்கவில்லை. குழந்தை மீது பாசம் இருப்பது போல பேட்டிகளிலும், டிவி ஷோக்களில் மட்டும் பேசி வருகிறார். அதனால் ஈகோவை விட்டுவிட்டு மகளை சென்று பாருங்க என ரசிகர்களும் அட்வைஸ் கூறினார்கள்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அர்னாவ் பேசும்போது தனது குடும்பம் நாசமாக போகும் என திவ்யா ஸ்ரீதர் மண்ணை வாரி தூற்றிவிட்டு போனார். அவரிடம் குழந்தையை காட்டும்படி நான் கேட்க மாட்டேன் என கூறி இருக்கிறார்.

Share:

Related Articles