NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நகைச்சுவை நடிகர் ‘சேசு’ காலமானார்

தமிழ் சின்னத்திரையில் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேசு . சின்னத்திரையை தொடர்ந்து, A1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles