நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். ஹீரோயினாகவும் பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
மேலும் அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். கவின் மற்றும்லோஸ்லியா காதல் ட்ராக் காரணமாக, சாக்ஷி அகர்வால் அந்த சீசனில் ஏற்படுத்திய பிரச்சனைகளை பிக் பாஸ் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
தற்போது சாக்ஷிக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறார்.
குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை தான் சாக்ஷி தற்போது காதலித்து கரம்பிடித்து இருக்கிறார். சர்ப்ப்ரைசாக அவர் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் இணையவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண புகைப்படங்கள் இதோ. .


