NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ் டிரைலர் வெளியானது

2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

அதற்கடுத்து சுரேஷ் கோபி மற்றும் ரெஞ்சி பானிக்கர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான காவல் திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றது. தற்பொழுது அடுத்ததாக நித்தின் , நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

இத்தொடரில் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடன் கிரேஸ் ஆண்டனி, கனி கஸ்தூரி, ஷ்வேதா மேனன், அல்ஃபி பஞ்சிகரன் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெப் தொடர் டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று ஜூலை 6 வெளியானது.

வேலை இல்லாத நாகேந்திரன் வெவ்வேறு பெயர்களில் 5 பெண்களை திருமணம் செய்கிறார். இவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை டிரைலர் காட்சிகள்

வெளிப்படுத்தவில்லை. முற்றிலும் ஒரு நகைச்சுவை தொடராக நித்தின் இதை இயக்கியுள்ளார். தொடரின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்தொடர், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.

Share:

Related Articles