NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலகிருஷ்ணா பட இயக்குனருடன் இணையும் தளபதி விஜய்.. செம மாஸ் கூட்டணி

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.லியோ படத்திற்கு பின் விஜய் அட்லீ அல்லது ஹெச். வினோத் இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என்பது போல் தகவல் கூறப்படுகிறது.ஆனால், தற்போது புதிதாக வேறொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும், கோபிசந்த் கூறிய கதையை விஜய் ஓகே செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் கோபிசந்த் கடைசியாக பாலகிருஷ்ணாவை வைத்து வீரசிம்மா ரெட்டி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles