NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

’மகாராஜா’ திரைப்பட இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட நயன்..! ரிஜெக்ட் செய்த இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன்

நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா வலிய வந்து வாய்ப்பு கேட்டதாகவும் ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’மகாராஜா’ திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே நயன்தாராவை வைத்து ஹீரோயின் சப்ஜெக்ட் படம் ஒன்றை இயக்க நிதிலன் சுவாமிநாதன் திட்டமிட்டார். பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்த போது நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதாகவும், இயக்குனருக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்பட்டது.

அதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாகவும் அதன் பிறகு தான் ’மகாராஜா’ படம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ’மகாராஜா’ திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து நாம் ஏற்கனவே கைவிட்ட படத்தை மீண்டும் தொடரலாம் என்று நிதிலன் சுவாமிநாதனிடம் நயன்தாரா கேட்டதாகவும் ஆனால் அவர் கொடுத்த டார்ச்சரை மனதில் வைத்துக் கொண்டே நிதிலன் சுவாமிநாதன் ’வேண்டாம்’ என மறுத்து விட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் அந்த ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை அவருடைய அடுத்த படமாக இயக்க இருப்பதாகவும் அதில் நயன்தாராவுக்கு பதில் வேறு நாயகி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Share:

Related Articles