NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘மத்தகம்’ Web Series எப்படி இருக்கிறது?

ஒரு கொலை. அதனை துப்பறியும் திரைக்கதை. இந்த வகைமையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு ஆரம்பத்தில் தமிழில் பெரும்பாலான Web Seriesகள் வெளியாகின.

இந்த Crime Thriller பாதையை ‘அயலி’ மடைமாற்றி சமூகதுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது Disney Plus Hot Starல் வெளியாகியிருக்கும் ‘மத்தகம்’ Gang Star கதைக்களத்தில் அடியெடுத்து வைத்து தமிழ் Web Seriesக்கு புதுமுகம் கொடுத்துள்ளது.

தற்போதைக்கு 5 Episodes மட்டுமே வெளியாகியுள்ள இந்தத் தொடரை ‘கிடாரி’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் “பிரசாத் முருகேசன்” இயக்கியுள்ளார்.

முதல் 3 Episodesல் காவல் துறைக்கும், ரவுடிகளுக்குமான ஒரு உலகை கச்சிதாகக் கட்டமைக்கிறது திரைக்கதை. குறிப்பாக, ஒவ்வொரு குற்றவாளியையும் அறிமுகப்படுத்தும் விதம், அவர்களுக்கான வெவ்வேறு வகையான பின்கதை கவனம் பெறுகிறது.

ஒரு கட்டத்தில் அதர்வா – மணிகண்டன் சந்திக்கும் காட்சிகளை எதிர்நோக்கி இருக்கும் பார்வையாளர்களுக்கு அதற்கான முழுத் தீனி கிட்டாமல் போகவே நீட்டி எழுதப்பட்டிருக்கும் கடைசி Episode சோர்வைத்தருவதுடன் ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தமிழ் Web Series பட்டியலில் ‘மத்தகம்’ நல்வரவு பெற்றுள்ளது.

Share:

Related Articles