இயக்குநர் “சாந்தகுமார்” இயக்கியுள்ள மூன்றாவது படத்தில் (அர்ஜுன் தாஸ்) கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய Update வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு “ரசவாதி” – (The Alchemist) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
மேலும், இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “அநீதி”திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.