NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகவுள்ள எந்திரன்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது.

சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. மேலும், கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படங்களின் வசூலை எந்திரன் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்படம் அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து அல்ட்ரா எச்.டி தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.

அத்துடன் இந்த திரைப்படம் ஜூன் 9இல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதுவரை பல நடிகர்களின் படங்கள் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியான நிலையில் எந்திரன் திரைப்படம் முதல்முறையாக புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles