NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் வசூல் சாதனை படைத்த கில்லி

விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷா, முத்துபாண்டி கதாபாத்திரத்தில்

பிரகாஷ்ராஜ், விஜய் தங்கையாக ஜெனிபர், ஓட்டேரி நரி கதாபாத்திரத்தில் தாமு உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் இடம் பெற்ற ‘அப்படிபோடு’ பாடல் அரங்கையே அதிர வைத்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ‘கில்லி’ படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கில்லி படம் வெளியான திரையரங்கங்கள் அனைத்தும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles