NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது…

கன்னட நடிகர் யஷ் கே.ஜி.எப் இரண்டு பாகங்களில் நடித்த பிறகு இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகராக மாறியுள்ளார். கே.ஜி.எப் 2 படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்த நிலையில் இன்னும் அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று யஷ்-ன் 19வது படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 8ந் தேதி காலை 9.55 மணியளவில் வெளியாகும் எனவும், இப்படத்தை கே.வி.என் என்கிற நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும், இப்படத்தை தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles