NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஜினி பற்றி அமிதாப் பச்சன்

வேட்டையன் படப்பிடிப்பின்போது நடந்த விஷயத்தை தன்னால் என்றுமே மறக்க முடியாது என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

மொரிஷீயஸில் ஹம் பட ஷூட்டிங் நடந்தபோது அந்த ஷாட்டுக்கு நாங்கள் தேவையில்லை. அதனால் ஒரு குட்டி பிரேக் கிடைத்தது என்றார். அப்பொழுது எல்லாம் வேனிட்டி வேன் கிடையாது. நான் என் காரில் ஏசியை போட்டு அமர்ந்தேன்.

ஜன்னல் வழியாக பார்த்தபோது ரஜினி சார் தரையில் படுத்து தூங்கியதை பார்த்தேன். அதுவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். அதை நான் மறக்கவே முடியாது.அவர் தரையில் படுத்து தூங்கியதை பார்த்ததும் நாம் காரில் இருக்கிறோமே என குற்ற உணர்வாக இருந்தது என அமிதாப் பச்சன் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles