நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகிய இருவரும் பிரபல தயாரிப்பாளர் ஐசிரி கணேஷின் மகளின் திருமணத்திற்கு ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தமை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது .
மேலும் இது குறித்து ஆர்த்தி தன்னுடைய எக்ஸ்தல பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக ரவி மோகன் தன்னுடைய சார்பில் நான்கு பக்க அறிக்கை ஒன்றினை தயாரித்து தன்னுடைய எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மறுபுறம் பாடகி கெனிஷா தன்னை பற்றி தொடர்ந்தும் குற்றம் சுமத்திவரும் கூட்டத்திற்கு பதில் கொடுக்கும் முகமாக தன்னுடைய எக்ஸ் தல பக்கத்தில் எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது, என் ஆன்மாவுக்குள்ளும் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நிலவுகிகன்றது. என் மீது நீங்கள் கற்களை எரிந்தாலும் அது என்னை காயப்படுத்த போவதில்லை அதிலிருந்து நான் மீண்டு வருவேன்.
மேலும், நான் இசையில் பயணிக்க விரும்புகிறேன் தழும்புகளை நான் ஞானமாக மாற்றுகிறேன் நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து; என் ஆன்மா பாடுகிறது என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.