NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லியோ 2 குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் லியோ. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அங்கிருந்து கிளம்பும் போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

“லியோ 2 படத்தின் கதை இருக்கு, விஜய் OK சொன்னால் எப்ப வேண்டுமானாலும் பண்ணிடலாம்,” என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் தெரிவித்தார்.

Share:

Related Articles