NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வசூல் வேட்டை நடத்தும் ‘ஜவான்’.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.150 ( இந்திய பெறுமதி) கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.75 கோடி ரூபாய் ( இந்திய பெறுமதி) வசூலித்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக் நடித்து வெளியான ‘பதான்’ படம் முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்திருந்த ( இந்திய பெறுமதி) நிலையில் அப்படத்தின் முதல்நாள் வசூலை ‘ஜவான்’ முறியடித்துள்ளது.

மேலும் இதுவரை வெளியான அனைத்து Bollywood படங்களின் முதல்நாள் வசூலையும் ‘ஜவான்’ முறியடித்துள்ளதாக சினிமா வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share:

Related Articles