NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘வள்ளி மயில்’ பட வேலையில் தீவிரம் காட்டும் விஜய் ஆண்டனி

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன்.

இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் ‘வள்ளி மயில்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, GP முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது.

‘வள்ளி மயில்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .

Share:

Related Articles