NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் மகனுக்கு கை கொடுக்கும் லைகா நிறுவனம்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் இந்த படத்தில் இருந்து பின் வாங்கி விட்டதால் ஜேசன் சஞ்சய் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு விஜய்யின் அட்மின் ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் சினிமா இயக்குனர் குறித்த படிப்பை படித்த ஜேசன் சஞ்சய் சில குறும்படங்களை இயக்கிய பின்னர், ஒரு தமிழ் படத்தை இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சுபாஷ்கரன் மற்றும் ஜேசன் சஞ்சய் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் புகைப்படமும் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவின் உட்பட யாரும் முன் வரவில்லை என்ற நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் கூட தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் திடீரென லைகா நிறுவனத்திற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தற்போது தயாரித்து வரும் படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு வெளியேறப் போவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் படம் உருவாகுவது கஷ்டம் தான் என்றும், நீங்கள் வேறு தயாரிப்பாளரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜேசன் சஞ்சயிடம் லைகா தரப்பு கூறிவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. முதல் படத்திற்கே தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜேசன் சஞ்சய் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் தான் விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் தானே அந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ’மகாராஜா’ படத்தை தயாரித்த ஜெகதீஷ், ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் ஜேசன் சஞ்சய் படத்தையும் அவர்தான் தயாரிப்பார் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share:

Related Articles