NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஷால் பட இயக்குனருடன் இணையும் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles