“Netfilix” OTT தளத்தில் August 4 வெளியான ஆவணத் தொடர் “The Hunt For Verrappan”
செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இத்தொடர் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் வீரப்பன் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
வீரப்பனுக்கு ஆதரவாக ஒரு சாராரும், அவருக்கு எதிராக இன்னொரு சாராரும் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
“வீரப்பன் பயங்கரவாதியல்ல, அவர் ஒரு வனக்காவலர்” என்று ஒரு பிரிவினர் சமூக வலைதளங்களில் அவரை கொண்டாடி வருகின்றனர். அதற்கு எதிர்கருத்து கொண்டவர்கள், “தந்தங்களுக்காக ஆயிரக்கணக்கான யானைகளை கொன்று குவித்தவர்தான் வனக்காவலரா?” என்று விமர்சிக்கின்றனர்.
இதனால் #Veerappan என்ற Hashtag ‘Twitter” சமூக வலைதளத்தில் இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.