NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது புஷ்பா – தி ரூல் திரைப்படத்தின் டீஸர்

புஷ்பா – தி ரைஸ் 2021ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றபை பெற்றது. இயக்குநர் சுகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது 373 கோடி வசூலித்தது.

தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார், மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பிறந்த தினத்தை முன்னிட்டு புஷ்பா-தி ரூல் திரைப்படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும் இப்படம் ஒகஸ்ட் 15ஆம் திகதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

Related Articles