NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைரலாகும் “Haddi” பட Trailer

இயக்குநர் (அனுராக் காஷ்யப்) மற்றும் நடிகர் (நவாசுதீன் சித்திக்) இணைந்து நடித்துள்ள, “Haddi” திரைப்படத்தின் Tariler வெளியாகியுள்ளது.

“அக்ஷத் அஜய் சர்மா” இயக்கியுள்ள இந்த திரைப்படம் September 7 Zee5 OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் திருநங்கையாக நடித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

“Haddi” குறித்து அனுராக் காஷ்யப் கூறும் போது, Haddiயை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக உதவி இயக்குநராக இருந்துள்ளார். இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக இடம் எனக்குக் கிடைத்துள்ளது.”

Haddi அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும். மேலும் நீங்கள் இதுவரை பார்த்திராத உலகைக் காட்டும்.

இந்த புதிய உலகத்தில் நவாஸை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த படத்தின் வெளியீட்டிற்காக நான் காத்திருக்கிறேன், பார்வையாளர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

Share:

Related Articles