NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கானின் ஜவான் டீசர் டீட்டெய்ல்ஸ் லீக்… அவசரமாக நாள் குறித்த அட்லீ!

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.முன்னதாக அவர் நடிப்பில் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது.

ஜவான் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜவான் டீசர் ரிலீஸ் குறித்து எக்ஸ்க்ளூசிவான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஜவான் டைட்டில் டீசர் வெளியான போதே, படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ளது. அதேநேரம் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் ஜவான் ரிலீஸ் தள்ளிப்போகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ஜவான் டீசர் ரெடியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், ஜவான் டீசரின் ரன்னிங் டைம் உள்ளிட்ட சில தகவல்களும் லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த டீசர் 1.54 ரன்னிங் டைம் உடன் வெளியாகவுள்ளது. மேலும், சென்சாரில் ஜவான் டீசருக்கு U/A சர்டிஃபிகேட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஜவான் முதல் டீசரான இது நேற்றுதான் (ஏப்.26) சென்சார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

அதனால், ஜவான் டீசரை மே முதல் வாரத்தில் வெளியிட இயக்குநர் அட்லீ முடிவு செய்துள்ளாராம். இதனால் ஜவான் டீசரை எதிர்பார்த்து ஷாருக்கான் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஜவான் டீசர் மே முதல் வாரத்தில் வெளியானால், படமும் சொன்னபடி ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜவான் ஷூட்டிங்கை சொன்னபடி முடிக்காமல் அட்லீ லேட் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் பதான் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் ஜவான் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் என பாலிவுட் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஷாருக்கானும் ஜவான் படத்தின் வசூலை அதிகம் எதிர்பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles