NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கானுக்கு “Y plus” பாதுகாப்பு

Bollywood திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ என இரண்டு படங்களும் Box Officeல் வசூலை குவித்தது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானுக்கு “Y Plus” பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மகாராஷ்டிரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதற்கு முன்பு ஷாருக்கானுக்கு 2 காவல் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு கொடுத்து வந்துள்ளனர். தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் ஷாருக்கானுக்கான பாதுகாப்பை Y Plus தரத்திற்கு உயர்த்தி இருக்கின்றனர்.

Share:

Related Articles