.விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக்செல்வன், சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். தமிழ் சினிமாவில் நிறைய சீரியல் கில்லர் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆகையால் ஒரு படத்துடன் மற்றொரு படத்தை பொதுவாக ஒப்பிடுவது வழக்கமாக தான் இருந்து வருகிறது.
ஆனால் எளிதில் போர் தொழில் படத்தை ஒப்பிட்டு சொல்லி விட முடியாது. ஏனென்றால் இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒவ்வொரு விஷயத்திற்கும் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார் என்பது படத்தில் தெரிகிறது.
திருச்சியை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் கொலை நடந்து வருகிறது. அதை விசாரணை செய்யும் அதிகாரியாக லோகநாதன் கதாபாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.
அவருக்கு உதவியாளராக புதிய போஸ்டிங் வாங்கிக் கொண்டு வருகிறார் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வன்.தொடர் கொள்ளைகளில் சிறுபிழை கூட செய்யாமல் நேர்த்தியாக முடிக்கும் சீரியல் கில்லரின் மர்ம முடிச்சுகளை இந்தக் கூட்டணி எவ்வாறு அவிழிக்கிறார்கள் என்பதுதான் போர் தொழில்.
கொலைக்கான காரணத்தையும் ஏற்றுக் கொள்ளும் படியாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். மேலும் படத்தின் ஒளிப்பதிவு கூடுதல் வலு சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெறும் வசனங்களும் அல்டிமேட் ஆக உள்ளது.