NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஜித் படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன்

அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தல் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு

ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும் பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அஃலி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles