கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கத்தில் அவரே நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து ‘காந்தாரா – 2 ‘ திரைப்படத்தினை இயக்கிகொண்டுவரும் நிலையில் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றது.
திரைப்படத்தில் நடித்து வந்த முக்கிய கதாபாத்திரங்கள் மரணமடைந்து வருகின்றனர். அதனடிப்படையில் உடுப்பிமாவட்டம் பைந்தூர் தாலுகா கொல்லூர் பகுதியில் காந்தார- 2 படப்பிடிப்பு நடந்து வந்த சமயம் திரைப்படத்தில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்துவந்த கேரள மாநில கோட்டயத்தைச்சேர்ந்த நடிகர் கபில் ஆற்றில் மூழ்கி மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து மற்றுமொரு திரைப்பட துணை நடிகர் ராகேஷ் பூஜாரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவர், உடுப்பியில் நடந்த திருமண மெஹந்தி விழா ஒன்றில் கலந்துகொண்டார் இதன்போது நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் .

மேலும் கொல்லூரில் படப்பிடிப்புக்கு துணை நடிகர்களை ஏற்றி வந்த வேன், விபத்துக்குள்ளானது.இவ்வாறு தொடர்ந்தும் திரைப்படத்தை எடுப்பதில் ஏற்பட்டுவரும் தடங்கல் குறித்து திரைப்படக்குழு அச்சமடைந்துள்ளது. மேல்குறிப்பிட்ட காந்தார- 2 திரைப்பட துணை நடிகர்களின் மரணம் திரைப்பட குழுவை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .