NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிரடி போலீசாக களம் இறங்கும் காஜல் 

2007 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக காஜல் அகர்வால் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து ‘சந்தாமாமா’ படத்தின் மூலம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

2009 ஆம் ஆண்டு ராஜமௌளி இயக்கத்தில் வெளிவந்த ‘மகதீரா’ படம் காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், நாயக், பிசின்ஸ் மேன் போன்ற பிரபல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.

பின் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தார்.

நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், மாரி போன்ற பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கருங்காப்பியம் படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து தெலுன்கு படமான தற்பொழுது சத்யபாமா படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏசிபி போலிஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 17 ஆம் திகதி வெலியாகிறது என படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதையொட்டி காஜல் அகர்வாலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles