“பெரும் பொருட்செலவில் ‘அந்தகன்’ படம் பண்ணியிருக்கோம். கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்” என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இன்னைக்கு ஜாலியாக நெல்லை பார்க்க வந்தேன், வந்த இடத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிளம்புகிறேன். ஹெல்மெட் ஒரு லைஃப் ஜாக்கெட் என்கிறார்கள்.
இது லைஃப் ஜாக்கெட் மட்டுமல்ல, குடும்ப கோட். சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதனால்தான் இந்த ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எனது ஆதரவாளர்கள் சார்பாக நிறைய வேலைகளைச் செய்துள்ளோம். விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன்.
இரண்டு மூன்று புதிய அழைப்புகள் வந்தன. விரைவில், நானும் இந்த பகுதியில் ஏதாவது செய்வேன். G.O.A.T படம் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. தியேட்டர் வந்து ஜாலியாக எஞ்சாய் பண்ணுங்க எல்லோரும் என்று கூறினார்.
கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதற்கு ஹார்ட் வொர்க் உட்பட பல கமிட்மெண்ட் இருக்க வேண்டும்.
விஜய் சாரிடம் அது அதிகம் உள்ளது. எனக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம், அதற்கு தைரியம் வேண்டும்.நான் நடிகனா நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகன் மட்டுமே இப்போதும். என்னால் மக்களுக்கு என் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன்.
மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நான் அவர்களுக்கு கைமாறாக இதுபோன்ற பணிகளை செய்கிறேன். அரசியல் நோக்கம் எதுவுல்லை ஏன்னு தெரிவித்துள்ளார்.