NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் Heroவாகும் G.V பிரகாஷ்

இசையமைப்பாளராகக் கவனம் ஈர்த்து, நடிகராகவும் தற்போது கவனம் ஈர்த்து வரும் G.V பிரகாஷ், அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

கடந்த 2023ம் ஆண்டு ‘விகடன் பிரஸ் மீட்’ நிகழ்ச்சியில் பேசியிருந்த ஜி.வி.பிரகாஷ், “‘கிங்ஸ்டன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் அனுராக் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறேன்.

இசையமைப்பாளராக வாய்ப்புக் கேட்டு நான் அவரது அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறேன்.

என்னுடைய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பின்னணி இசையை அவரிடம் போட்டுக் காண்பித்தேன். அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட அனுராக், ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தில் இசையமைக்க வாய்ப்புக் கொடுத்தார்.

இப்போது அவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புத் தானாகவே வந்திருப்பதில் மகிழ்ச்சி” என்று G.V பிரகாஷ் பேட்டியளித்திருந்தார்.

Share:

Related Articles