NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பானி இல்ல திருமணவிழா – தனித்தனியே வந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன்

சமீபகாலமாக ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால் ஆராத்யா படிக்கும் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றதால் பிரச்சினைகள் தீர்ந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.

அம்பானி இல்ல திருமண விழாவில் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

இதனால், இருவரும் பிரிய உள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில், விழாவிற்கு தனித்தனியே வந்திருந்தாலும், இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Share:

Related Articles