NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்மாவுக்கு பிடிக்காத விஷயத்தை நான் ஒருநாளும் செய்ய மாட்டேன்- Bollywood நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018ம் ஆண்டு தடக் என்ற Remake  படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தனது மகளுக்காக தேர்வு செய்ததே நடிகை ஸ்ரீதேவி தான்.

இப்போது தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தன்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜான்வி பேசுகையில், ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவேன், ஆனால் மொட்டை அடிப்பது மட்டும் செய்ய மாட்டேன்.

அந்த கதாபாத்திரத்திற்காக ஆஸ்கரே போன்ற விருது கிடைக்கும் என்றாலும் செய்ய மாட்டேன். என்னுடைய நீள்மான தலைமுடிக்காக என் அம்மா அத்தனை அக்கறை எடுத்துக்கொண்டார்.


4 நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிடுவார், எனது தலைமுடி பற்றி மிகுந்த பெருமை இருந்தது. முதல் படத்திற்காக தலைமுடியை வெட்டியபோது அம்மா கோபப்பட்டார், எந்த குழலிலும் தலைமுடியை வெட்டக்கூடாது என்று கூறி இருக்கிறார் என்றார்.

Share:

Related Articles