NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அரண்மனை 4’ ஐ தொடர்ந்து சுந்தர் சி படத்தில் மீண்டும் இணையும் தமன்னா

இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்த ’அரண்மனை 4’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராக உள்ளார் என்பதும் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் தமன்னா நடித்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகவும் இந்த படமும் ஒரு த்ரில் கதை அம்சம் கொண்டது என்றும் அனேகமாக பேய் படமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ’அரண்மனை 5’ படம் கிடையாது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் சுந்தர் சி ஜோடியாக தமன்னா நடித்த இருப்பதாகவும் முழுக்க முழுக்க காமெடி மற்றும் த்ரில் கதையம்சம் கொண்டது என்றும் வழக்கமான சுந்தர் சி படத்தில் உள்ள கமர்சியல் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ என்ற படத்தை தயாரித்த ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share:

Related Articles