NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியாவிலேயே முதல் முறையாக நிஜ சிங்கத்துடன் படப்பிடிப்பு

2010 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் அமலா பால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மைனா. இப்படத்தை பிரபு சாலமன் இயக்கினார்.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று பல விருதுகளை குவித்தது. இதற்கு முன் பிரபு சாலமன் கிங், கொக்கி, லீ, லாடம், போன்ற படங்களை இயக்கி இருந்தாலும்.

மைனா திரைப்படமே தமிழ் திரையுலகை திரும்பி பார்க்கச் செய்தது.

அதற்கடுத்து கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார். கடைசியாக செம்பி திரைப்படத்தை இயக்கினார்.

இப்படத்தில் செம்பி மற்றும் அஸ்வின் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர். இது ஒரு சிறுவனுக்கும் ,

சிங்கத்திற்கும் இடையே உள்ள நட்பை பிரதிபளிக்கும் படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித சி.ஜி காட்சிகளும் இல்லாமல் படமாக்க முயற்சித்துள்ளனர். இதற்காக விஜய் ஸ்ரீ சிங்கக்த்து

பயிற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவே ஆகும்.

இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் படத்தின் இசையே மேற்கொள்கிறார். இப்படத்தை காஜா மைதீன் மற்றும் அப்துல் கானி தயாரித்துள்ளனர்

Share:

Related Articles