NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இசைப்புயல் A.R.Rahmanஇன் பிறந்தநாள் இன்று!

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் A.R.Rahman.

புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் வளர்ச்சி ஹாலிவுட் வரை வளர்ந்து இருக்கிறது.

ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார். இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வருகிறார்.

அடுத்தடுத்து தமிழில் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை, ஜீனி, RJ.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படம் என இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று தனது 58வது அகவை தினத்தை கொண்டாடும் A.R.Rahman க்கு மாகாயுகம் வலைத்தளம் வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறது.

Share:

Related Articles